Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைக்கு பெயர் வைப்பதில் தகராறு - நீதிபதியின் ருசிகர தீர்ப்பு

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (10:09 IST)
கேரள உயர்நீதிமன்றம் நீதிபதி, குழந்தைக்கு பெயர் வைத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கணவன் - மனைவியின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் கணவன் மனைவி தரப்பிற்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்நிலையில் இதுகுறித்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனைவி தரப்பினர் குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்’ என்று பெயரிட வேண்டும் என்றனர். கணவன் தரப்பு ‘அபிநவ் சச்சின்’ என்று பெயரிட வேண்டும் என்றனர்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்’ என்று  பெயர் சூட்டினார். இரு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் வகையில், மனைவி கூறியதில் ஜோகன் என்ற பெயரையும், கணவன் கூறியதில் சச்சின் என்ற பெயரையும் எடுத்துக்கொண்டு பெயர் வைத்ததாக நீதிபதி தெரிவித்தார். நீதிபதியின் இந்த முடிவிற்கு பல தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. தவெக தலைவர் விஜய் அறிக்கை..!

5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை.. 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments