அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (10:08 IST)
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசா பெற தினமும் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதுண்டு. இந்த நிலையில் இன்று மர்ம மனிதன் ஒருவன் இந்த தூதரக அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இன்று காலை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் அமெரிக்க தூதரகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம போன் கால் ஒன்று வந்தது. இந்த மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க போலீசார் மற்றும் சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இந்த விசாரணையில் செல்போன் மூலம் மிரட்ட விடுத்த நபர் சென்னையை அடுத்த மண்ணடி என்ற பகுதியை சேர்ந்த சாதிக் பாட்ஷா என்பது தெரியவந்தது. உடனடியாக அவரை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவரிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் 
 
முதல்கட்ட விசாரணையில் சாதிக் பாட்ஷா குடிபோதையில் இருந்ததாகவும்,. அப்போது, குடிபோதையில் என்ன செய்வது என்றே தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது. அவரிடம் மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

ஐபிஎஸ் அதிகாரியை கைது செய்யும் வரை இறுதி சடங்கு செய்ய மாட்டோம்: தற்கொலை செய்த அதிகாரியின் மனைவி.!

பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: திடீரென பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments