Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பயணி தவறவிட்ட பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோகாரர்...

Advertiesment
auto driver
, வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (19:03 IST)
ஐதராபாத் நகரில் வசித்து வருபவர் முகமது ஹபீப், இவர் அங்கு ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் இவரது ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் தனது கைப்பையை தவறவிட்டு விட்டார். பின்னர் அவர் இறங்கிவிட்டுத்திரும்பிச் செல்லும்போது தன் ஆட்டோவில் கைப்பை இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தான் இறக்கிவிட்ட இடத்திற்குச் சென்று அப்பெண்ணைத் தேடியுள்ளார் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் அருகிலுள்ள காலாபத்தார் காவல் நிலையத்தில் அந்த கைப்பையை ஒப்படைத்தார். அப்போது கைப்பையைத் தவறவிட்ட பெண்ணும் அங்கு புகார் கொடுக்க வந்தார்.

பின்னர், கைப்பையைப் பெற்றுக்கொண்ட பெண், அதிலுள்ள பணத்தை எண்ணிப்பார்த்து ரூ. 1.4 லட்சம் இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்து,  ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ. 5 ஆயிரம் வெகுமதி அளித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யார் கொடுத்தது இவ்வளவு அதிகாரம்? அரசு மீறு எகிறிய எச் ராஜா!