Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி கன்னத்தில் 168 முறை அறையச் சொன்ன ஆசிரியர்!

Webdunia
வியாழன், 16 மே 2019 (20:11 IST)
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுளா மாவட்டத்தில் உள்ள தண்டலா  பகுதியில் ஜவஹர் நவோதயா என்ற அரசு பள்ளியில் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்த மாணவியை கன்னத்தில் அறைந்த ஆசிரியரால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுளா மாவட்டத்தில் உள்ள தண்டலா  பகுதியில் ஜவஹர் நவோதயா என்ற அரசு பள்ளி இயங்கி வருகிறது.
 
கடந்த ஆண்டு இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக 10 நாட்கள் வகுப்புக்கு விடுப்பு எடுத்திருந்தார்.
 
அதன் பின்னர் ஜனவரி மாதம் 11ஆம் தேதி மீண்டும் பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆனால் வீட்டுப்பாடம் எழுதாமல் இவர் சென்றிருந்ததாகக் கோபமடைந்த ஆசிரியர் மஜோஜ் வர்மா மாணவியை தொடர்ச்சியாக 6 நாட்களுக்கு 14 மாணவர்களைஇருமுறை கன்னத்தில் அறையுமாறு உத்தரவிட்டுள்ளார்.
 
ஆசிரியர் சொன்னது போல் மாணவர்கள் அனைவரும் சுமார் 168 முறை மாணவியின் கன்னம் பழுக்க அடித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மாணவியின் தந்தை புகார் அளித்ததன் பேரில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து மனோஜை கைது செய்த போலீஸார்  14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர்.தற்போது ஆசிரியர் மனோஜ் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அதை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

மணிப்பூரில் எம்.எல்.ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு: 41 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments