Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#MeToo: சிக்கிய டாடா மோட்டர்ஸ் முக்கிய புள்ளிகள்

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (20:37 IST)
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை #MeToo என்னும் ஹேஸ்டேக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 
 
இதில் பல நடிகர்களின் பெயர்கள் அடிபடுகிறது. ஆனால், தற்போது சினிமா, அரசியலை தாண்டி சில தொழில் நிறுவனங்களின் பெரிய தலைகளின் பெயரும் அடிபடுகிறது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்ப்ரேட் கம்யூனிகேஷன் தலைவர் சுரேஷ் ரங்கராஜன் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. 
 
சுரேஷ் ரங்கராஜன் மீது இதர்கு முன்னர் வோடபோன், நிஸான் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். இவர் மீது சக பெண் ஊழியர்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதனால், இவர் மீது டாடா மோட்டர்ஸ் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
இது குறித்து டாடா மோட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு, பாலியல் விவகாரங்களை டாடா மோடார்ஸ் நிறுவனம் பொறுத்துக்கொள்ளாது. இவர் மீது எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும், அதுவரை அவரை கட்டாய விடுமுறை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிரியர்களை அறையில் பூட்டி சிறை வைத்த மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. மாத வாடகை ரூ.3 கோடி..!

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

அடுத்த கட்டுரையில்