Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பரப்புரையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தியதால் பரபரப்பு

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (21:04 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாதியில்    நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான  பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இம்மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனால் அனைத்து கட்சிகளும்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில்,  காங்கிரஸ் கட்சியும்  போட்டியில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிவமோகா என்ற நகரில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜக  தலைவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழக பாஜக தலைவர்  அண்ணாமலையும் கலந்துகொண்டார்.  அப்போது,  வாக்கு சேகரிக்கும் வண்ணம் பிரச்சாரம கூட்டம் தொடங்கியபோது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, அனைவரும் எழுந்த நின்றனர். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா, தமிழ்த்தாய் வாழ்த்தை நிறுத்திவிட்டு, கர் நாடக மாநில கீதத்தைப் பாடும்படி கூறினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாதியில்    நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த வாகனத்தில் சொந்த ஊர் செல்கிறீர்களா? ஒரு முக்கிய அறிவுறுத்தல்..!

பெண்களை தொடவே பயப்படணும்..! இன்றே கடுமையான தண்டனை சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரும் முதல்வர்!?

நீங்க லாபம் சம்பாதிக்க.. தொழிலாளர்கள் மனைவியை கேவலப்படுத்துவீங்களா? - L&T நிறுவன தலைவரை வெளுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இன்றும் தங்கம் விலை உயர்வு.. ஒரே நாளில் 200 ரூபாய் உயர்ந்ததால் பரபரப்பு..!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments