Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு.! நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து ஆலோசனை.!!

Governor

Senthil Velan

, புதன், 17 ஜூலை 2024 (13:09 IST)
டில்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை தமிழர் ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்த நிலையில் இருவரும், தேசிய கல்விக்கொள்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
 
தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, ஐந்து நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசினார். இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ரவி இன்று சந்தித்தார். அப்போது இருவரும் கல்வித்துறையை மேலும் முன்னேற்றுவது மற்றும் தேசிய கல்விக்கொள்கை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். 

நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து விவாதித்ததாக தகவல் வெளியானது.   நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர் ஆர்.என் ரவி,  மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர் கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் பற்றி விவாதித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
மேலும் திறன் மற்றும் கல்வி மூலம் நமது மாநில இளைஞர்களின் நலனில் ஆழ்ந்த அக்கறை கொண்ட அவருக்கு நன்றி என்று ஆளுநர் ரவி கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைனில் மது விற்பனையா.? டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி விளக்கம்..!