Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவனை தீவிரவாதியோடு ஒப்பிட்ட பேராசிரியர் சஸ்பெண்ட்

Advertiesment
karnataka
, செவ்வாய், 29 நவம்பர் 2022 (19:11 IST)
மாணவனை தீவிரவாதியோடு ஒப்பிட்ட பேராசிரியருக்கு எதிர்ப்பு குவிந்து வரும் நிலையில்,  பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள உடுப்பி மாவட்டத்தில் இயங்கி வரும் மணிப்பால், இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில்  கடந்த வாரம் மாணவர்கள், பேராசிரியர்களிடையே வாக்கு வாதம்  ஏற்பட்டு, இதுகுறித்த வீடியோவும் வைரலானது,

அப்போது, ஒரு பேராசிரியர்  இஸ்லாம் மாணவர் ஒருவரை நீ கசாப் மாதிரியா என்று கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில், தீவிரவாதி கசாப் முக்கிய குற்றவாளியாக சிறையில் இருந்து 2012ல் தூக்கு தண்டனை பெற்றவர் ஆவார்.

மாணவனை தீவிரவாதியோடு ஒப்பிட்ட பேராசிரியருக்கு எதிர்ப்பு குவிந்து வரும் நிலையில்,  பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதியை எதிர்த்துப் போட்டியிட்டால் சவுக்கு சங்கருக்கு ஆதரவு - சீமான்