Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப் பேரவைக்கு வந்த ஃபட்நாவிஸ், சிரிப்புடன் வரவேற்ற சரத்பவார் மகள்..!!

Arun Prasath
புதன், 27 நவம்பர் 2019 (08:43 IST)
மஹாராஷ்டிரா சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் வருகை புரிந்தார். அவரை சிரிப்புடன் வரவேற்றார் சரத் பவாரின் மகள்.

மஹாராஷ்டிராவில் அரசியலில் ஆட்சியமைப்பதற்கான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித் பவாரின் ஆதரவோடு முதல்வராக பதவியேற்றார் ஃபட்நாவிஸ்.

ஆனால் அந்த ஆட்சி 4 நாட்களே நீடித்தது. ஃபட்நாவிஸ் ஆட்சிக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். உச்சநீதிமன்றம் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் மீண்டும் ஒரு திருப்பமாக ஃபட்நாவிஸ் தனது முதல்வர் பதவியையும், அஜித் பவார் தனது துணை முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் உத்தவ் தாக்கரே இனி முதல்வராக பதவியேற்க போகிறார். இதனிடையே தற்போது இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் சட்டப்பேரவையில் புதிய எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமானம் செய்துவைத்து வருகிறார். இதனை தொடர்ந்து சட்டப்பேரவைக்கு தேவேந்திர ஃபட்நாவிஸ் வருகை புரிந்தார். அப்போது அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மகள் சுப்ரியா.

ஃபட்நாவிஸை எந்த வித முக சுழிப்பும் இல்லாமல் சுப்ரியா சிரிப்புடன் வரவேற்றதை மற்றவ்ர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு.. முதல்வர் அறிவிப்பு..!

தமிழக பட்ஜெட் எப்போது? சபாநாயகர் அப்பாவு தகவல்..!

ஆட்டோக்களுக்கு அரசு செயலி அமைக்கப்படும்.. அமைச்சர் சிவசங்கர் தகவல்..!

Go back Governor கோஷமிட்ட எம்.எல்.ஏ.க்கள்: உபி சட்டமன்றத்தில் பரபரப்பு..!

ஓபிஎஸ் ஒரு கொசு.. அவரை பற்றி பேசுவதற்கு இது நேரமில்லை: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments