Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டுவிட்டரில் வைரலாகும் ‘மண்டியிட்ட அமித்ஷா’: சாணக்கியனுக்கே தோல்வியா?

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (08:38 IST)
ஒரு மாநிலத்தில் மெஜாரிட்டி இல்லை என்றாலும் அரசியல் கட்சிகளை உடைத்து ஆட்சி அமைப்பதில் கில்லாடி என்ற பெயர் பெற்றவர் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா. அவருடைய சாணக்கியத்தனத்தால்தான் கர்நாடகா, கோவா, மணிப்பூர் உள்பட ஒருசில மாநிலங்களில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது 
 
அமித்ஷாவின் இந்த மேஜிக் மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் பலிக்கவில்லை. இது ஏன் என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது
 
மற்ற மாநிலங்களில் கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜகவிற்கு ஒத்துழைப்பு தந்தது. எனவே எதிர்க்கட்சிகளை மட்டுமே உடைக்க வேண்டிய வேலை அமித்ஷாவுக்கு இருந்தது. ஆனால் மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிவசேனாவே பிரச்சனை செய்ததால் கூட்டணி கட்சியையும் சமாளித்து எதிர் கட்சிகளையும் உடைக்க வேண்டிய இரட்டை வேலை அமித்ஷாவுக்கு இருந்தது
 
இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து அஜித் பவார் தலைமையிலான  ஒரு பிரிவின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைய அமித்ஷா செய்த மேஜிக் ஓரளவு பயன் கொடுத்தாலும் அந்த மேஜிக் இரண்டு நாட்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது. இதனையடுத்து தற்போது அங்கு சிவசேனா தலைமையிலான ஆட்சியின் அமைய உள்ளது 
 
கர்நாடகத்தில் எதிர்க்கட்சிகளை ஆட்சி செய்ய வைத்து ஆறு மாதங்கள் வரை பொறுமை காத்து அதன் பின் திடீரென அந்த ஆட்சியை கவிழ்த்து பாரதிய ஜனதா ஆட்சி அமைத்ததுபோல் மகாராஷ்டிர மாநிலத்தில் அமித்ஷா பொறுமை காத்து இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். அவசரப்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடனே உடைத்தது தவறு என்றும் அவர்கள்  கூறி வருகின்றனர் 
 
இந்த நிலையில் அமித்ஷாவின் சாணக்கியத்தனம் தோல்வி அடைந்ததை அடுத்து ’மண்டியிட்ட அமித்ஷா’ என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments