Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாதம் இல்லாமல் சட்டம் நிறைவேற்றப்படுவதில் வருத்தம்! – உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (11:38 IST)
நாட்டில் புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் மீது போதிய விவாதம் நடத்தப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் கொரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்கள் இயற்றுவது வருத்தமளிக்கிறது. போதுமான விவாதங்கள் நடைபெறாததால் சட்டத்தின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.

முன்னதாக நீதிபதி என்.வி.ரமணா நீதிபதிகளுக்கு நாட்டில் போதிய பாதுகாப்பு இல்லை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments