Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆபாச சைகை… சுய இன்பம்… பெண்ணிடம் அத்துமீறிய நபர் – மெட்ரோ ரயிலில் நடந்த ஆபாசம் !

ஆபாச சைகை… சுய இன்பம்… பெண்ணிடம் அத்துமீறிய நபர் – மெட்ரோ ரயிலில் நடந்த ஆபாசம் !
, திங்கள், 10 ஜூன் 2019 (10:08 IST)
டெல்லி மெட்ரோ முன்னால் அமர்ந்திருந்த பெண்ணிடம் ஆபாச சைகைக் காட்டியும் அருகில் சென்று சுய இன்பம் செய்தும்  ஒரு நபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

டெல்லி மெட்ரோ ரயிலில் வழக்கமாக பயணிக்கும் அந்த பெண் தனது இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது பின்னால் உள்ள நபர் ஒருவர் அந்த பெண்ணிடம் ஆபாசமான சைகளைக் காட்டியுள்ளார். இதனால் அருவருப்படைந்த அந்தப் பெண் அவரைக் கண்டுகொள்ளாதது போல இருந்துள்ளார்.

இதனை சாதகமாக எடுத்துக்கொண்ட அந்த நபர் இன்னும் ஒருபடி மேலேப் போய் அந்த இடத்திலேயே சுய மைதுனம் செய்ய ஆரம்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அடுத்த நிறுத்தத்தில் போலிஸாரிடம் அந்த நபர் குறித்து புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக விசாரணையில் ஈடுபட்ட போலிஸார் சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில் குறிப்பிட்ட நபரை போலீசார் அடையாளம் கண்டறிந்து, கைது செய்துள்ளனர். 

விசாரணையில் அவர் ஹரியானா மாநிலம், சார்க்கி தாத்ரி மாவட்டத்தைச் சேர்ந்த நிதின் என்ற அந்த நபர் இதுபோல பெண் பயணிகளிடம் அவ்வப்போது சில்மிஷம் செய்து வந்ததாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”திருடன், திருடன்” விஜய் மல்லையாவை கேவலப்படுத்திய கிரிக்கெட் ரசிகர்கள்