Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும்! – பிரதமரிடம் முதல்வர்கள் கோரிக்கை!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (12:23 IST)
கொரோனா பாதிப்பு குறித்து பிரதமருடன் முதல்வர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர்கள் பலர் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி தலைமையிலான நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. அதில் ஊரடங்கை நீட்டிக்க அனைவரும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை கூட்டம் நடைபெற்று உள்ளது. அதில் பல மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இன்று அல்லது நாளை பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்துவெளி எழுத்து முறை.. ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் எத்தனை பேர்? அன்புமணி கேள்வி

மாணவி பாலியல் விவகாரம் எதிரொலி: அண்ணா பல்கலை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்..!

மதுரை எம்பி வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

நாளை கூடுகிறது சட்டசபை கூட்டம்.. கவர்னர் உரையாற்றுகிறார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments