Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் ஸ்டாலின்.,. யார் யாரை சந்திக்கிறார் – முழுவிவரம்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (08:24 IST)
இன்று காலை டெல்லி செல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லியில் யார் யாரை எப்போது சந்திக்கிறார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி மாநிலம் மற்றும் டெல்லி பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு ஸ்டாலின் டெல்லிக்குக் கிளம்பினார். அங்கு 10 மணிக்கு சென்றடையும் ஸ்டாலின் முதலில் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு செல்கிறார். அங்கு தமிழக எம்பிக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன் பின்னர் மதிய உணவை முடித்த பின்னர் சிறு ஓய்வுக்குப் பின்னர் மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.

அந்த சந்திப்புக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கவில்லை. அதனால் அந்த சந்திப்பு முடிந்த பின்னர் மீண்டும் தமிழ்நாடு திரும்ப உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான ஆட்சியா? மாஃபியாக்களுக்கான ஆட்சியா? எச். ராஜா

அண்ணாமலை, தமிழிசை, எச் ராஜா வீடுகள் முன் போலீசார் குவிப்பு.. கைதாகிறார்களா?

எப்படியாவது கோவிலை காப்பாத்துங்க! கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்கிய அர்ச்சகர்! - அதிர்ச்சி சம்பவம்!

மகனுக்கு சீட் கேட்ட செங்கோட்டையன்.. மறுத்த எடப்பாடி?? - மோதலுக்கு இதுதான் காரணமா?

குரூப்-1, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு எப்போது? டிஎன்பிஎஸ்சி தலைவர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments