சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளார். மேலும் கல்யாணி பிரியதர்ஷன் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் மாநாடு பட இசையமைப்பாளர், யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டரில் மாநாடு படத்தின் சிங்கிள் பாடல் வரும் 21ம் தேதி வெளியாகும் என்று அறிவித்து உள்ளார். இதனை அடுத்து சிம்பு மற்றும் யுவன் சங்கர் ராஜா ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர் .
இந்நிலையில், மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,, எத்தனை நாட்கள் ஆனாலும் இப்படம் தியேட்டர்களில்தான் ரிலீஸாகும் எனக் கூறியுள்ளார்.
மேலும், தற்போது இரண்டாது கொரோனா அலை குறைந்துள்ளதால், வரும் ஆயுதபூஜை விடுமுறைக நாட்களில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸான சிம்புவின் ஈஸ்வரன் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தை வெற்றி பெறச் செய்ய சிம்பு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.