Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா போராட்டம் – ஸ்டாலி்ன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு …

Webdunia
திங்கள், 4 பிப்ரவரி 2019 (14:47 IST)
மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணாப் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்து திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ரோஸ்வேலி மற்றும் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்குகளை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதனை முன்னர் விசாரித்த கொல்கத்தா காவல் ஆணையருமான ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ அழைத்தது. ஆனால் அவர் ஆஜராகததால் சிபிஐ அவரைக் கைது செய்ய மேற்கு வங்கம் வந்தது. ஆனால் சிபிஐ அதிகாரிகளை செயல்பட விடாமல் முற்றுகையிட்டுப் பின் விடுவித்தனர்.

மேற்கு வங்கத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட வேண்டுமானால் மாநில அரசின் அனுமதிப் பெற வேண்டும். ஆனால் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே சிபிஐ அத்துமீறல் செய்துவருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு முதல் தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மம்தாவின் இந்தப் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு போன்றோர் ஆதரவு அளித்துள்ளனர். அதையடுத்து இப்போது திமுக தலைவர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் அவரது டிவிட்டர் பதிவில் ‘மத்திய பாசிச பாஜக அரசு சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அமைப்புகளை எல்லாம், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சமரசத்துக்கு உள்ளாக்கியுள்ளது. நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் ஜனநாயகத்தை காக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜி அவர்களுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். ஜனநாயகத்தைப் பாதுகாப்போம்’ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் CHATGPT, DeepSeek ஏஐ பயன்படுத்த கூடாது: மத்திய நிதி அமைச்சகம் தடை

தொங்கு சட்டசபை ஏற்பட்டால் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு இல்லை: காங்கிரஸ் அறிவிப்பு..!

கடன் வாங்கியது ரூ.6000 கோடி.. வங்கிகள் வசூலித்தது ரூ.14000 கோடி.. விஜய் மல்லையா வழக்கு..!

18 ஊழியர்களை திடீரென நீக்கிய திருப்பதி தேவஸ்தானம்.. என்ன காரணம்?

டெல்லியில் நடைபெறும் திமுக ஆர்ப்பாட்டம்.. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments