Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொட்டை அடிச்சாச்சு, 10 லட்ச ரூபாயை கொடு! இஸ்லாமிய எழுத்தாளருக்கு பிரபல பாடகர் சவால்

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (20:38 IST)
பாலிவுட்டின் முன்னணி பாடகரில் ஒருவரான சோனு நிகம் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் இஸ்லாம் மதம் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்திருந்தார். அதில் ‘மசூதிகளில் அதிகாலை ஒலிப்பெருக்கிகளில் ஓதப்படும் தொழுகைப் பாடல்கள்’ தனது தூக்கத்தை கெடுப்பதாக பதிவிட்டிருந்தார்.



 


மேலும், நபிகள் தோன்றிய காலத்தில் மின்சாரமே இருக்கவில்லை எனவும் கோயில்களிலும் குருத்வாராக்களிலும் இதுபோன்று சத்தங்கள் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்வதில்லை என சோனு நிகம் கூறியிருந்தார்.

இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் பிரபல இஸ்லாம் எழுத்தாளர் ஒருவர் சோனு நிகம் தலையை மொட்டை அடிப்பவருக்கு தான் ரூ.10 பத்து லட்சம் தருவதாக அறிவித்தார்.

இந்நிலையில் சோனு நிகம் தானே தன்னுடைய தலையை மொட்டை அடித்துவிட்டு சவாலை நிறைவேற்றிவிட்டேன், இப்போது எனக்கு 10 லட்ச ரூபாயை கொண்டு வந்து கொடுங்கள்' என்று மீண்டும் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுன்சிலர்களை தாக்கியதாக வழக்கு.. 22 ஆண்டுகளுக்கு பின் அமைச்சர் மா சுப்பிரமணியன் விடுதலை..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. தமிழகத்தில் மீண்டும் மழை: வானிலை அறிவிப்பு..!

வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை! - முதல்வரின் அதிரடி சட்டத்திருத்தம்! முழு விவரம்!

வாடகைக்கு நண்பராக சென்று ரூ.69 லட்சம் சம்பாதித்த இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் - எதிர்க்கட்சித் தலைவர் விவாதம்.. முழு விவரங்கள் இதோ:

அடுத்த கட்டுரையில்
Show comments