Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் நிலை பாதிப்பு : இளவரசி கோரிக்கையை நிராகரித்த சிறை நிர்வாகம்

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (18:15 IST)
பெங்களூர் சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு உடல் நிலைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரின் உறவினர்கள் இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அவர்கள் மூவரும் தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இதில் சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில், சிறையில் வாடும் இளவரசி நீரிழிவு நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார் எனத் தெரிகிறது. எனவே இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க அனுமதிக்க வேண்டும் என இளவரசி தரப்பில் சிறைத் துறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.


 

 
ஆனால், அவரின் கோரிக்கையை சிறைத் துறை நிர்வாகம் நிராகரித்து விட்டது. மேலும், சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டதாம். இதனால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் இளவரசி தவிக்கிறாராம். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

அடுத்த கட்டுரையில்
Show comments