Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் இயங்கலாம்: மே.வங்க முதல்வர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 14 ஜூன் 2021 (17:11 IST)
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் சற்று முன்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு தளர்வுகளை அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார் 
 
மேற்கு வங்க மாநில அரசு அலுவலகங்கள் 25% பணியாளர்களுடன் பணிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மால்கள், வணிக வளாகங்களில் உள்ள கடைகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத பணியாளர்கள் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மால்கள் வணிக வளாகங்களில் கடைகள் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை மாதம் 1ஆம் தேதிவரை நீடிக்கும் என்றும் ஜூலை 1-ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படும் நிலைமையை பொறுத்து ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என்றும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கலாம் என்றும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனமழை எதிரொலி: இன்று நடக்கவிருந்த என்னென்ன தேர்வுகள் ஒத்திவைப்பு?

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments