Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களால் கொரோனா பாதிப்பு அதிகமா? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (20:02 IST)
நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த சில நாட்களாக திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவ்வாறு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களால் 6 மாநிலங்களில் கொரோனா வைரஸின் பாதிப்பு மிக அதிகமாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வந்ததன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் நடந்தே அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு சென்றனர். இந்த நிலையில் உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்கள் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் அந்த மாநிலங்களில் கொரோனா நோய் பாதிப்பு மிக அதிகமாக அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது
 
இந்த ஆறு மாநிலங்களிலும் கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தற்போது எட்டு மடங்கு அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்ய ஆறு மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? மறுவிசாரணை தேவை! - தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

இது பெரியார் மண் இல்ல.. பெரியாரே ஒரு மண்ணுதான்! - மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சீமான்!

13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்

அனைவருக்குமான வளர்ச்சியை முன்னெடுக்க உறுதியேற்போம்: விஜய் குடியரசு தின வாழ்த்து..!

இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செரியன் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments