Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (16:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மருந்தை பதுக்கிய நிறுவனத்தை விசாரிப்பதை எதிர்ப்பதாக பட்னாவிஸ் மீது சிவசேனா உள்ளிட்ட ஆளும் கட்சிகள் விமர்சனம் வைத்துள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை பதுக்கி வைப்பது சட்டப்படி பெரும் குற்றமாகும். இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியதாக மருந்து நிறுவன உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை மும்பை போலீஸார் விசாரிப்பதற்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள சிவசேன எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் “இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் பட்னாவிஸ் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். மாநில அரசுகளுக்கு ஆதரவு தருவதை விட அவர்களிடம் குற்றம் கண்டுபிடிக்கவே பாஜகவினர் விரும்புகின்றனர். எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் கிடைத்தால் அதை பட்னாவிஸ் வாயில் போட்டு விடுவேன்” என பேசியுள்ளார்.

சிவசேனா எம்.எல்.ஏவின் இந்த சர்ச்சை கருத்தை தொடர்ந்து பட்னாவிஸ் ஆதரவாளர்கள் கெய்க்வாட்டிற்கு எதிராக பேசி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments