7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

Mahendran
செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (14:15 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில், 19 வயது இளம் பெண்ணை போதை மருந்து கொடுத்து, 7 நாட்கள் 23 பேர் மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த 19 வயது இளம் பெண், கடந்த 29ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது. கடந்த நான்காம் தேதி அந்த இளம் பெண் வீட்டிற்கு திரும்பினார்.
 
அவர் தனது பெற்றோரிடம், தன்னை 7 நாட்கள் 23 பேர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறியதும், இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
 
முதல் நாள், ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, போதைப்பொருள் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மறுநாள் மூன்று பேர் அதே ஹோட்டலுக்கு வந்து, மீண்டும் போதை மருந்து கொடுத்து மயக்க நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, மொத்தம் 7 நாட்களில் தன்னை 23 பேர் மாறி மாறி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக, பெற்றோரிடம் அழுது கூறியுள்ளார்.
 
இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 23 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவத்தில் 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக வந்திருக்கும் தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்