Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

Siva
செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (14:07 IST)
வங்கக் கடலில் ஒரு பக்கம் காற்றழுத்தத் தாழ்வு தோன்றினாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பெண்களுக்கு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வு காரணமாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் என்றும், சில இடங்களில் மூன்று டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவு ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்.. எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments