செந்தில் பாலாஜிக்கு இப்போதைக்கு ஜாமீன் இல்லை.! ஜூலை 10 வரை காத்திருக்க வேண்டும்.!!

Senthil Velan
வியாழன், 16 மே 2024 (12:20 IST)
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் தற்போது ஜாமீனில் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 11 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்நிலையில், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும், மீண்டும் ஜாமீன் கோரியும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். இதனை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து, வழக்கின் விசாரணை நேற்று நடைபெற இருந்த நிலையில், இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, வேறு வழக்கு விசாரணை இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று  மத்திய அரசின் சொல்லிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார்.

ALSO READ: தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூலை 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போதைக்கு செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிய வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10வது மாடியில் உயிரை பணயம் வைத்த கள்ளக்காதலி.. கள்ளக்காதலனின் மனைவியிடம் இருந்த தப்பிக்க எடுத்த ரிஸ்க்..!

என்னை எதிர்த்து செங்கோட்டையன் போட்டியிடப் போகிறாரா? நயினார் நாகேந்திரன் கேள்வி..!

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

அடுத்த கட்டுரையில்
Show comments