Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலையில் செமஸ்டர், ஆகஸ்டில் கல்லூரி தொடக்கம்: யூஜிசி தகவல்

Webdunia
வியாழன், 30 ஏப்ரல் 2020 (06:45 IST)
'கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஜூலையில் நடத்தலாம் என்றும் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் யூஜிசி அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு குறித்த இந்த அறிவிப்பு மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களுக்கு தேர்வு இன்றி இன்டர்னல் மதிப்பெண்களைக் கொண்டு கிரேடு வழங்கலாம் என்றும்  இன்டர்னல் மதிப்பெண்கள் 50 சதவிகிதமும், முந்தைய பருவ தேர்வு மதிப்பெண்கள் 50 சதவீதமும் என எடுத்துக்கொள்ளலாம் என்றும் பருவத்தேர்வு இல்லாத மாணவர்களுக்கு இன்டர்னல் மதிப்பெண்களை 100% எடுத்துக் கொள்ளலாம் என்று யுஜிசி தெரிவித்துள்ளது.
 
மேலும் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கும் செப்டம்பரில் புதிதாக சேரும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம் என்று அறிவித்துள்ள செய்முறை தேர்வுகள், ஆராய்ச்சி படிப்புக்கான செயல்பாடுகளை ஸ்கைப் மூலம் நடத்தலாம் என்றும் அறிவித்துள்ளது 
 
ஒருவேளிஅ தேர்வு வைக்கும் நிலை ஏற்பட்டாலும் மூன்று மணிநேர தேர்வுக்கு பதில் இரண்டு மணி நேரம் மட்டுமே தேர்வை நடத்தலாம் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் கலை அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்ற பரிந்துரை ஏற்கப்படவில்லை என்றும் யூஜிசி கூறியுள்ளது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments