Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீட் கொடுக்க மறுத்த பாஜக.. சுயேட்சையாக போட்டியிடும் பெண் தொழிலதிபர்..!

Mahendran
வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (16:04 IST)
ஹரியானா மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான பெண் தொழிலதிபர் ஒருவர் சீட் கேட்டதாகவும் ஆனால் பாஜக மறுத்துவிட்டதை அடுத்து அவர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பெண் தொழில் அதிபர்களில் ஒருவரான சாவித்திரி ஜிண்டால் ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஹிசார் என்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 ஆண்டுகள் எம்எல்ஏவாக இருந்த நிலையில் சமீபத்தில் அவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். போர்ப்ஸ் இந்தியா பணக்கார பெண் தொழிலாளர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்த இவரது சொத்து மதிப்பு பல கோடி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில் அதில் ஹிசார் தொகுதியில் வேறொருவரை போட்டியிட பாஜக அறிவித்துள்ளதை அடுத்து சுயேட்சையாக போட்டியிட சாவித்திரி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனால் ஹரியானா மாநில தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் கோவில், மசூதி தொடர்பாக வழக்கு தொடர முடியாது: உச்சநீதிமன்றம் தடை..!

சென்னைக்கு இதுதான் கடைசி மழையாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்..!

மகளிர் உதவித்தொகை ரூ.2100 ஆக உயர்த்தப்படும்: அதிரடி அறிவிப்பால் பெண்கள் மகிழ்ச்சி..!

மணிப்பூருக்கு போக சொன்னால் கரீனா கபூரை பார்க்க செல்கிறார் மோடி: காங்கிரஸ்

டிசம்பர் 15ஆம் தேதி இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments