Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட எனக்கு ராகுல் காந்தி உதவி செய்தார்: சசிதரூர்

Webdunia
புதன், 5 அக்டோபர் 2022 (08:39 IST)
காங்கிரஸ் கட்சியை தலைவர் தேர்தலில் போட்டியிட எனக்கு ராகுல்காந்தி உதவி செய்தார் என சசிதரூர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலில் சசிதரூர் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மல்லிகாஜூர்னே கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால் இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது உறுதி என கூறப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை திரும்பப் பெற பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தினர் என்றும் ஆனால் ராகுல் காந்தி மட்டுமே தேர்தலில் போட்டியிட ஆதரவு தெரிவித்தார் என்பதும் தேர்தலில் போட்டி இருப்பது நல்லதுதான் என்று அவர் கூறியதாகவும் சசி தரூர் தெரிவித்துள்ளார் 
 
நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என 10 வருடங்களுக்கு மேலாக ராகுல்காந்தி தன்னிடம் கூறியதாகவும் சசிதரூர் கூறியுள்ளார்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

கரையைக் கடந்த போதும் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும் ஃபெஞ்சல் புயல்… வானிலை மையம் தகவல்!

2900 மோட்டார்கள் பொருத்தி வெள்ளத்தை வடிக்கும் பணிகள்… அமைச்சர் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments