ராகுல் காந்தி அறிவுறுத்தல்.. உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார் சசிகாந்த் செந்தில்..

Siva
செவ்வாய், 2 செப்டம்பர் 2025 (07:55 IST)
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசை கண்டித்து, கடந்த நான்கு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். 
 
மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதிப் பங்களிப்பை உரிய நேரத்தில் விடுவிப்பதில்லை என்று தமிழக அரசு குற்றம் சாட்டி வருகின்றது. குறிப்பாக, கல்வி திட்டங்களுக்காகத் தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி ஒதுக்கீடு வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவதாக சசிகாந்த் செந்தில் தனது போராட்டத்தில் தெரிவித்தார்.
 
இந்த நிதி ஒதுக்கீட்டை உடனடியாக விடுவிக்கக் கோரி, சசிகாந்த் செந்தில் கடந்த நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். 
 
சசிகாந்த் செந்திலின் போராட்டத்தை, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், சசிகாந்த் செந்திலின் உடல்நிலையை கருத்தில் கொண்டும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
 
இதனையடுத்து பழச்சாறு அருந்தி சசிகாத் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொண்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments