முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியதை பெங்களூர் சிறையில் இருந்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொலைக்காட்சியில் இருந்து பார்த்ததாக தகவல்கள் வந்துள்ளது. இதற்காக அவர் வியாழக்கிழமையே சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற்றிருந்தாராம்.
முதல்வர் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது தனது வழக்கறிஞர்களை சந்தித்த சசிகலா, எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, ஒருசில ஆலோசனைகளையும் வழங்கினாராம்.
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சசிகலாவின் பினாமி ஆட்சியாக செயல்படுவார் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், தற்போது சசிகலா தொலைபேசி மூலம் ஆலோசனை கூறியதில் இருந்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.