Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி ரயில் கதவில் சிக்கிய பெண்ணின் சேலை: பெரும் பரபரப்பு

டெல்லி ரயில் கதவில் சிக்கிய பெண்ணின் சேலை: பெரும் பரபரப்பு
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:11 IST)
டெல்லி மெட்ரோ ரயி்லின் கதவில் பெண் ஒருவரின் சேலை சிக்கிக் கொண்டதை அடுத்து, அந்த பெண்  நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
டெல்லியின் இந்தர்லோக் அருகே சாஸ்திரி நகரைச்  சேர்ந்த கீதா என்ற 40 வயது பெண், தனது மகளுடன் நவாடா என்ற பகுதியில் இருந்து மோதி நகர் நோக்கி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் அவர் கீழே இறங்க முற்பட்டார். அப்போது ரயிலின் கதவு மூடியது. அந்த சமயத்தில் ரயில் இருந்து இறங்கிய கீதாவின் சேலை ரயிலின் கதவில் சிக்கிக்கொண்டது. கதவில் சிக்கிய சேலையை கீதா எவ்வளவோ முயற்சித்தும் வெளியே எடுக்க முடியவில்லை. இந்த நிலையில் ரயில் கிளம்பியது. 
 
webdunia
இதனால் கீதா சில மீட்டர் தொலைவு நடைமேடையில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தை ரயிலின் உள்ளே இருந்த பார்த்த மெட்ரோ ரயில் பயணி உடனடியாக அவசரகால பட்டனை அழுத்தினார். இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில் கீதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனைக்கு மெட்ரோ ஊழியர்களால் அழைத்து செல்லப்பட்டார்.  மெட்ரோ ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போது சேலை கதவில் சிக்காமல் கவனமாக இறங்க வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக - திமுக கூட்டணியினர் இடையே மோதல் - கரூரில் பரபரப்பு