Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏழு நாட்களுக்குள் சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையம் கெடு

Advertiesment
ஏழு நாட்களுக்குள் சல்மான்கான் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேசிய பெண்கள் ஆணையம் கெடு
, செவ்வாய், 21 ஜூன் 2016 (14:20 IST)
கற்பழிக்கப்பட்ட பெண்ணை போல் உணர்ந்தேன் என்று பாலிவுட் நடிகர் சல்மான்கான் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த தேசிய பெண்கள் ஆணையம், ஏழு நாட்களுக்குள் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது.


 

 
சல்மான்கான் ‘சுல்தான்’ என்ற இந்திப் படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், ஒரு இணையதளம் அவரை சமீபத்தில் பேட்டி எடுத்தது. 
 
அப்போது சுல்தான் படத்தில் மல்யுத்த வீரராக நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று செய்தியாளர் கேட்டார். அதற்கு சல்மான்கான் அளித்த பதில்தான் சர்ச்சையையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. அவர் கூறும்போது “படப்பிடிப்பின் போது, ஒவ்வொரு நாட்களும் சண்டை காட்சிகள் ஆறு மணி நேரம் எடுக்கப்பட்டது. அப்போது 120 கிலோ எடை கொண்ட எதிரியை நான் அலேக்காக தூக்கி கீழே எறிய வேண்டும். அதுவும் பலமுறை, வெவ்வேறு திசைகளில் தூக்கி போட வேண்டும். 
 
படப்பிடிப்பு முடிந்து செல்லும்போது என்னால் நேராக நடக்க கூட முடியாது. ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போல் என் உடம்பு ரணமாக இருக்கும். அதன்பின் சாப்பிட்டு விட்டு, மீண்டும் பயிற்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அதை நிறுத்தவும் முடியாது” என்று கூறியிருந்தார். 
 
அவரின் இந்த கருத்துக்கு பல பெண்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். 
 
அவர் மடத்தனாமக பேசுவதாகவும், அதை பெரிது படுத்த வேண்டாம் என்று பெண் கருத்து கூறி வருகின்றர்.அவர் தன்னை மறந்து பேசுவதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், இப்படி பேசியதற்காக சல்மான்கான் இன்னும் 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேசிய ஆணையம் கெடு விதித்துளது. இந்த விவகாரம் பலிவுட் திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவர்களுக்கு ஒரு நீதி? எங்களுக்கு ஒரு நீதியா? மோடி மீது வேல்முருகன் பாய்ச்சல்