Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலையில் குவியும் கூட்டம்: அனுமதி எண்ணிக்கை அதிகரிப்பு!

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (09:43 IST)
சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைய பக்தர்கள் குவிவதால் அனுமதி எண்ணிக்கையை அதிகரிப்பதாக தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில் மலைக்கு மாலைபோட்டு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்னதாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும், அவர்களும் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்பதால் பலரால் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும், மாலை போட்டும் மலைக்கு போக முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒருநாளைக்கு 1000 பேர் என்பது தேவசம்போர்டு வருமானத்தையும் வெகுவாக குறைத்திருப்பதால் இனி நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பேரை அனுமதிக்க தேவசம்போர்டு முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பொங்கல் தினத்தில் மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments