Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலசேகரப்பட்டினத்தில் அப்படி என்ன இருக்கு? இஸ்ரோ சிவன் விளக்கம்!

Webdunia
திங்கள், 2 டிசம்பர் 2019 (16:51 IST)
புதிய ராக்கெட் ஏவுதளம் ஒன்று அமைப்பதற்கு குலசேகரப்பட்டினம் சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டது ஏன் என  இஸ்ரோ தலைவர் சிவன்  விளக்கமளித்துள்ளார். 
 
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ஏற்கனவே இரண்டு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ள நிலையில் மேலும் ஒரு ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இதற்கு சிறந்த இடமாக தூத்துக்குடி மாவட்ட குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் வேலை துவங்கியுள்ளது. 
 
நேராக தெற்கு நோக்கி ராக்கெட் ஏவ வேண்டும் என்றால், ஏவுதளம் தமிழத்தின் மையப்பகுதி கடற்பகுதியில் இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி எஆக்கெட் ஏவ முடியாது என்பதால், குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 
 
அதோடு, குலசேகரபட்டினத்தில் ஏவுதளம் அமைக்க மற்றொரு முக்கிய காரண, நெல்லை மாவட்ட மகேந்திரகிரியில் உள்ள திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் எனவும் கூறப்படுகிறது. இந்த ஏவுதளம் அமைக்க தூத்துக்குடியில் 2300 ஏக்கர் தேவைப்படும் எனவும், இந்த ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவைவிட சிறியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments