Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் கார் விபத்தில் மரணம்....

Advertiesment
நடிகர் ரவி தேஜாவின் சகோதரர் கார் விபத்தில் மரணம்....
, ஞாயிறு, 25 ஜூன் 2017 (17:26 IST)
பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் ராஜ்(45) ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார்.


 

 
கடந்த 24ம் தேதி இரவு பத்து மணியளவில் பரத் ராஜ் தன்னுடைய காரில் ஹைதராபாத்தின் ஷம்ஷாபாத்தில் இருந்து கச்சிபவுளிக்கு சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு லாரியின் பின்புறம் அவரின் கார் மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
மேலும், மோதிய வேகத்தில் காரின் முன்புறம் கடுமையாக சேதமடைந்ததால், அவரின் முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டது. அவரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

webdunia

 

 
இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும், போதைப் பொருள் வைத்திருந்ததாக, ஹைதராபாத் போலீசார் அவரை ஒருமுறை கைது செய்துள்ளனர்.
 
போலீசாரின் விசாரணையில் பழுதடைந்த லாரியை அதன் டிரைவர் சாலையின் ஓரத்தில் நிறுத்தியுள்ளார். அப்போது வேகமாக வந்த பரத்ராஜ் அந்த லாரியின் மீது மோதி அந்த விபத்தில் அவர் பலியானது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாவனா வழக்கில் திருப்பம் ; நடிகை திலீப்பிடம் பணம் கேட்டு மிரட்டல் கடிதம்