Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட குத்து ரம்யா : வசை பாடிய பாஜக

வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட குத்து ரம்யா

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (14:01 IST)
பாகிஸ்தான் தொடர்பாக, நடிகையும் காங்கிரஸ் முன்னாள் எம்.பியுமான ரம்யா தெரிவித்த கருத்து பாஜகவினரை கோபப்படுத்தியுள்ளது.


 

 
பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வது, நரகத்துக்கு செல்வது போன்றது என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது பற்றி நடிகையும், காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யுமான ரம்யா கருத்து தெரிவித்த போது “நான் பாகிஸ்தான் சென்றிருக்கிறேன். மனோகர் பாரிக்கர் கூறியது போல் அது நரக நாடு அல்ல. அது ஒரு நல்ல நாடு.  அந்த நாட்டு மக்களும் நம்மை போன்றவர்கள்தான்” என்று கருத்து தெரிவித்தார்.
 
அவரின் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரை கண்டித்து, பாஜகவினர் மைசூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகியும், நடிகருமான ஜக்கேஷ் “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ரம்யா ஆகியோர் பாகிஸ்தானில் குடியேறட்டும். நம் எதிரி நாடான பாகிஸ்தானை ரம்யா புகழ்வது நல்லதல்ல. 
 
அவரின் கருத்து பாகிஸ்தானுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பது போல் உள்ளது. மேலும், காங்கிரஸின் தேசபக்தி ரம்யா தெரிவித்துள்ள கருத்து மூலம் தெரிகிறது” என்று கூறியுள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்டாகிராமில் வந்த லிங்க்: க்ளிக் செய்த அடுத்த நிமிடத்தில் பணத்தை இழந்த இளம்பெண்..

ஸ்டெர்லைட் தடையை மறுஆய்வு செய்ய கோரிய மனு : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments