Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறங்கி வரும் ராகுல் காந்தி... பச்சை கொடி காட்டுவாரா சச்சின் பைலட்?

Webdunia
திங்கள், 13 ஜூலை 2020 (16:13 IST)
இன்று மாலை ராகுல் காந்தியை, சச்சின் பைலட் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க சமாதான முயற்சிகளில் காங்கிரஸ் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வர் சச்சின் பைலட்டிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. சச்சின் பைலட் தனக்கு ஆதரவாகவே அதிக எம்.எல்.ஏக்கள்  உள்ளதாக கூறி வருகிறார். இந்த சிக்கலை பயன்படுத்தி சச்சின் பைலட்டை பாஜகவின் பக்கம் ஈர்க்கவும் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.
 
இந்நிலையில், இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் நடந்தது போன்று ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை இழந்துவிட கூடாது என்பதில் கட்சி தலைமை தீவிரமாக உள்ளது.
 
இதனால் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் இறங்கியுள்ளது. இந்த முயற்சியின் முதல் படியாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சச்சின் பைலட் உடன் பேசி வருவதாக தெரிகிறது. இவர்கள் இன்று மாலை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் - இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்தது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

சமூகநீதியில் முன்னேறும் தெலுங்கானா; சமூகநீதியை நுழையவிட மறுக்கும் தமிழ்நாடு: டாக்டர் ராமதாஸ்..

அமெரிக்காவின் குற்றச்சாட்டில் அதானி பெயரே இல்லை: மூத்த வழக்கறிஞர் தகவல்..!

பாஜக கூட்டணியில் சீமான்.. ரஜினி ஆதரவு.. ஜூனியர் விகடன் கட்டுரையின் சாராம்சம்..!

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அடுத்த கட்டுரையில்
Show comments