Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராகுல் யாத்திரை... ஒரு இன்ப சுற்றுலா? பாஜகவினர் விமர்சனம்

Advertiesment
RAGUL GANDHI
, சனி, 10 செப்டம்பர் 2022 (15:47 IST)
இந்திய காங்கிரஸ் பாரத  ஒற்றுமை யாத்திரை' என்ற பெயரில்  காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இந்து காஷ்மீர் வரை யாத்திரை தொடங்கப்பட்டுள்ள நிலையில் இந்த  யாத்திரை மீது பாஜகவினர் பல விமர்சனங்கள் முன்வைத்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டு இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில், பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில்,  கட்சியை பலப்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ராகுல் யாத்திரை பயணம் தேர்வு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, நடைபயண யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,570 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது.

இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் 118 காங்கிரஸ் உறுப்பினர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். இந்த 118 பேரும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் 60 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுல்காந்தி மற்றும் 118 பேருக்கு பாதுகாப்பாக பாதுகாப்பு குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாத்ரீகர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க மருத்துவ குழுவும் தயாராக உள்ளது.

தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், பின்னர் மாலை 3.30 தொடங்கி இரவு 7 மணி வரையிலும் நடைபயணம் மேற்கொள்ளப்படும். ஒரு நாளைக்கு 22 முதல் 26 கிலோமீட்டர் வரை பயணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நடை பயணம் செல்லும் மாநிலங்களில் மக்களை சந்தித்து கலந்துரையாடவும், கலை நிகழ்ச்சிகளுக்கும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இந்த நிலையில், பாஜக பிரமுகர்கல் ராகுல் யாத்திரையின் மீது பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளனர்.

அதில் ராகுல் காந்தி தன்னுடன் பயணிப்பவர்களை வட மாநிலத்தவர்களை மட்டும் நியமித்துள்ளார் என்றும், ராகுல் காந்தியின் ஜோடா யாத்திரைக்கு பல கோடிகள் மதிப்பிலான சொகுசு கேரவன் பயன்படுத்தப்படுவதாகவும் கூறி, அந்த கேரேஜ் வாகனத்தில் வீடியோவும் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை- ராகுல் காந்தி