அடுத்தாண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அத்துடன் தங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தி வருகிறது.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்துள்ள கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், மத்திய பாஜக அரசு, ஜி20 அழைப்பிதழ் மற்றும் பிரதமர் மோடியின் பெயர்ப் பலகையில் பாரத் என்ற பெயர் இடம்பெற்றது.
இதுபற்றி கேரளா, வயநாடு தொகுதி எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி, ''இந்தியா, பாரத் ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக் கொள்ளக்கூடியவைதான். இந்தியா, பாரத் ஆகிய இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைக்கப்பட்டது பாஜகவுக்கு எரிச்சல் உண்டாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சாதிய கட்டமைப்பை பாதுகாக பாஜக என்டஹ் எல்லைக்கும் செல்லும், ஆதிக்கம் செலுத்துபவர்களால ஒருசிலர் மட்டுமே இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது'' என்று தெரிவித்துள்ளார்.