Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரம்: ''நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு'' -திருமாவளவன்

ராகுல் காந்தி பதவி பறிப்பு விவகாரம்: ''நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு''  -திருமாவளவன்
, திங்கள், 27 மார்ச் 2023 (15:05 IST)
விசிக எம்பி., திருமாவளவன், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில்,  ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் நீரவ் மோடி குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறினார். இது சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது.

இந்த அறிவிப்பு காங்கிரஸ்  மற்றும்  அதன் கூட்டணி கட்சிகள், வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் எதிக்கட்சிகள் குரலெழுப்பி வருகின்றனர்.
இந்த  நிலையில், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான விசிக எம்பி., திருமாவளவன், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது, ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில்,  ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

இதுகுறித்து, அந்த நோட்டீஸில், ராகுல்காந்தியின் பதவி பறிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தின் வரலாற்றில் கிரிமினல் என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், ‘’ நாடாளுமன்ற அனைத்து  எதிர்கட்சித் தலைவர்களும் பேரணி-பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, காங்கிரஸ் கட்சியின்  முன்னால் தலைவர் திரு ராகுல்காந்தி  அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜனநாயகத்துக்கு விரோதமாக பறித்தததைக் கண்டித்தும் அரசியல் சதியை  அம்பலப்படுத்தும் வகையில்  நாடாளுமன்ற  அனைத்து  எதிர்க்கட்சி தலைவர்களும்  நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் பேரணி மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நானும்  பங்கேற்றுக் கொண்டிருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரியங்கா காந்தியின் தீவிர அணுகுமுறை காங்கிரசை கரை சேர்க்குமா?