Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி; இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (11:11 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக உள்ள சோனியா காந்தி நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். நீண்ட காலமாக தலைமை பதவிக்கு தன்னை தயார்படுத்தி வரும் ராகுல் காந்தி விரைவில் தலைவர் பொறுப்பை ஏற்பார் என பல நேரங்களில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 4-ந் தேதி ராகுல் காந்தி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததாலும் ராகுல் காந்தியின் தலைவர் பதவிக்கு ஆதரவு தெரிவித்து 89 பேர் முன்மொழிந்து வேட்பு மனு தாக்கல் செய்ததாலும், ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி விட்டது.இருப்பினும் மனுக்களை வாபஸ் இன்று கடைசி நாள் என்பதால் இன்றைய தினம்  ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு பின்னர் ராகுல் காந்தி வரும் 16-ம் தேதி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும்..! ஐகோர்ட் உத்தரவு..!!

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments