Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனிப்பட்ட நபரின் காதல் விருப்பங்கள் மதிப்பு மிக்கவை! – ராகுல்காந்தி LGBTQ+ ஆதரவு பதிவு!

தனிப்பட்ட நபரின் காதல் விருப்பங்கள் மதிப்பு மிக்கவை! – ராகுல்காந்தி LGBTQ+ ஆதரவு பதிவு!
, வியாழன், 3 ஜூன் 2021 (12:38 IST)
பால்புதுமையினருக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக ஜூன் மாதம் அவர்களுக்கான மாதமாக கொண்டாடப்படும் நிலையில் ராகுல்காந்தி அவர்களை ஆதரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

ஆண் – பெண் இடையேயான காதலை தவிர மற்ற ஓரின காதல்கள், பாலியல் மாற்றங்கள் உள்ளவர்களை குறிக்கும் LGBTQ+ என்ற பிரயோகம் தற்போது உலகம் முழுவதும் விவாதங்களை எழுப்பியுள்ளது. இப்படியான பால்புதுமையர் தங்களுக்கான சட்டரீதியான அங்கீகாரத்திற்காக பல நாடுகளிலும் தொடர்ந்து கோரிக்கைகள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் LGBTQ+ சமூகத்தினரை அங்கீகரிக்கும் வகையில் Pride Month ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி “அமைதியான தனிநபர் தேர்வுகள் மதிக்கப்பட வேண்டியவை. காதல் என்பது காதல்தான்” என கூரியுள்ளதுடன், LGBTQ+ குறித்த படத்தையும் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

12ஆம் வகுப்பு தேர்வு குறித்து முடிவெடுப்பது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!