Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலை இனி நாள்தோறும் மீண்டும் உயரும்: ராகுல் காந்தி

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (15:45 IST)
பெட்ரோல் டீசல் விலை இன்று அதிரடியாக குறைந்ததை அடுத்து இனி பெட்ரோல் டீசல் விலை நாள்தோறும் உயரும் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியை குறைத்தது. இதன் காரணமாக பெட்ரோல் விலை 8 ரூபாயும் டீசல் விலை 7 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைத்தது போல் மாநில அரசும் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
 இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைந்து விட்டதாக யாரும் மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்றும் இனிமேல் தினந்தோறும் பெட்ரோல் விலை மீண்டும் உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
2020 ஆம் ஆண்டு 69 ரூபாய் 50 காசுக்கு விற்பனை ஆன பெட்ரோல் இன்று 96 ரூபாய் 60 காசுக்கு விற்பனை ஆகி வருவதாகவும் குறைப்பது போல் குறைத்துவிட்டு மீண்டும் தினமும் ஒரு ரூபாய் அளவு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி விடுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments