Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியாவிற்கு தடுப்பூசிகள் வழங்க தயார்! – அமெரிக்கா அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (15:33 IST)
வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசிகள் வழங்க தயார் என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த 2 ஆண்டுகளில் பல நாடுகளிலும் பரவி ஏராளமான மக்களை பலி கொண்டது. ஆனால் அந்த சமயத்திலும் வடகொரியாவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகாமல் இருந்து வந்தது உலக நாடுகளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

தற்போது வடகொரியாவில் முதன்முறையாக கொரோனா பாதிப்புகள் உறுதியாக தொடங்கியுள்ளன. அங்கு ஒருவருக்கு கொரோனா உறுதியானதால் நாட்டிற்கே முழு முடக்கம் அறிவித்தார் கிம் ஜாங் அன்.

ஆனால் வடகொரியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் வடகொரியாவில் 2.20 லட்சம் பேருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதியாகியுள்ளன.

இந்நிலையில் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்க தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுகுறித்து தென் கொரியா சென்றபோது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “வடகொரியாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் தடுப்பூசிகளை வழங்க தயாராக உள்ளோம். நாங்கள் உடனடியாக அதை செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்கான ரகசியம் என்னிடம் உள்ளது: ஓபிஎஸ்

காசு கொடுத்தால் சிபிஎஸ்சி தேர்வு வினாத்தாள்கள்? - CBSE விடுத்த எச்சரிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மே மாத டிக்கெட் விற்பனை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஒரே நாடு ஒரே தேர்தல்.. உச்சநீதிபதியின் கருத்து கேட்க கூட்டுக்குழு முடிவு..!

ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் சிக்கினால் கல்வி சான்றிதழ் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments