Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்போனை ஒட்டுக்கேட்பது திருடர்கள் செய்யும் செயல்: ராகுல் காந்தி

செல்போனை ஒட்டுக்கேட்பது திருடர்கள் செய்யும் செயல்: ராகுல் காந்தி
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (14:04 IST)
செல்போனை ஒட்டுக்கேட்பது நேர்மையானவர்கள் செய்யும் செயல் அல்ல.. குற்றவாளிகள், திருடர்கள் செய்யும் செயல் என  எதிர்க்கட்சியினர், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய மெசேஜ் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார்.

 எதிர்க்கட்சி தலைவர்களான சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மகுவா மொய்த்ரா, சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே பிரிவைச் சேர்ந்த (யுபிடி) பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா எம்பி, காங்கிரஸ் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா மற்றும் தி வயர் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் ஆகியோர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக ஆப்பிள் நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தலைவர்களின் செல்போன்களை ஹேக் செய்தது யார் என்று தெரியாத நிலையில் இந்த வேலையை ஆளும் கட்சி தான் செய்திருக்கும் என எதிர் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன.

குறிப்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.  செல்போனை ஓட்டு கேட்பது திருடர்கள் செய்யும் வேலை என்றும் அதைத்தான் மத்திய அரசு செய்து வருகிறது என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து என்ன பதிலடி வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களின் உரிமைகளை ஆளுநர் பறித்து வருகிறார்: தமிழக அரசு குற்றச்சாட்டு..!