Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளை டீ சர்ட் இயக்கம்.. இளைஞர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு..!

Advertiesment
Rahul Gandhi

Mahendran

, திங்கள், 20 ஜனவரி 2025 (10:30 IST)
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளை டீ சர்ட் இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் இளைஞர்கள் இணைய வேண்டும் என்று அறிவித்துள்ளார். 
 
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பிரதமர் மோடி ஏழை எளிய மக்களை கண்டு கொள்வதில்லை என்றும், ஒரு சில பணக்காரர்களுக்கு மட்டுமே அவர் பாடுபட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார்.
 
மேலும், உழைக்கும் வர்க்கத்தினர் மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளனர் என்றும், அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை என்று தெரிவித்துள்ளார். இதற்காகவே வெள்ளை டீசர்ட் இயக்கம் என்ற ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தினரின் குரலாக நாம் செயல்படுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த இயக்கத்தில் சேர அனைத்து இளைஞர்களையும், உழைப்பாளர்களையும் அழைக்கிறேன் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை அடுத்து, இந்த வெள்ளை டீசர்ட் இயக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த இயக்கம் இந்தியாவில் புரட்சியே ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐஐடி இயக்குனரின் கோமியம் குறித்த கருத்து.. அமைச்சர் பொன்முடி கண்டனம்..!