Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி - காஷ்மீர்.. ராகுல் காந்தியின் பாதயாத்திரையால் பயனில்லையா?

Webdunia
ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (16:36 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை நடத்திய நிலையில் வழியெங்கும் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த எழுச்சி ஐந்து மாநில தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் இன்று காலை வெளியான தேர்தல் முடிவுகளில் தெலுங்கானா தவிர மற்ற மூன்று முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. அப்படி என்றால் ராகுல் காந்தியின் பாதயாத்திரை மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட வில்லையா என்ற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர்

இரண்டாம் கட்ட பாதயாத்திரை ராகுல் காந்தி தொடங்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் முதல் கட்ட பாதயாத்திரைக்கு எழுச்சி இல்லாத நிலையில் அந்த பாதயாத்திரை நடைபெறுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

மொத்தத்தில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி 5 மாநில தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளதால் பாராளுமன்ற தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்து விட்டது என்று பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தும் போட்டோ ஷூட்கள், வெற்று விளம்பரங்கள்: ஈபிஎஸ்

புயல் எதிரொலி.. மூடப்பட்டது சென்னை விமான நிலையம்.. அனைத்து விமானங்களும் ரத்து..!

புயல், கனமழையால் பாதிப்பா? உதவி எண்களை அறிவித்த பேரிடர் மேலாண்மை ஆணையம்..!

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments