Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவையில் ‘பறக்கும் முத்தம்’ கொடுத்த ராகுல் காந்தி: சபாநாயகரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் புகார்

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (17:20 IST)
மக்களவையில் ராகுல் காந்தி பறக்கும் முத்தம் கொடுத்ததாக பாஜக பெண் எம்பிக்கள் புகார் அளித்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மக்களவை கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ஆவேசமாக பேசினார்.  
 
இதனை அடுத்து  அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி மீது கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது பறக்கும் முத்தம் கொடுத்தபடியே ராகுல் காந்தி அவையை விட்டு வெளியேறினார். 
 
இதனை அடுத்து பாஜக பெண் எம்பிக்கள் சபாநாயகர் இடம் ராகுல் காந்தி தங்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.  இந்த நடவடிக்கை பெண் எம்பிக்களை மட்டும் இன்றி நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கு எதிரானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் தொழில் வரி 35 சதவீதம் உயர்வு: மாநகராட்சி முடிவால் கடும் அதிருப்தி..!

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?

3வது முறையாக நிரம்பும் மேட்டூர் அணை.. உபரி நீரை ஏரிகளில் நிரப்ப ராமதாஸ் கோரிக்கை..!

நாளை மறுநாள் முதல் சென்னை புறநகர் ரயில்களின் நேரம் மாற்றம்: முழு விவரங்கள்..!

கழிவறையில் கூட தங்கம்.. அரவிந்த் கெஜ்ரிவால் குறித்த திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments