மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது ராகுல் காந்தி பேசியதை அடுத்த அமைச்சர் ஸ்மிருதி இரானிபதிலடி கொடுத்துள்ளார்.
ஊழல் வாரிசு அரசியலுக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார். நீங்கள் இந்தியா கிடையாது, ஊழலை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தது காங்கிரஸ்தான். ஊழலை பற்றி பேசும்போது உங்கள் கூட்டணியில் இருக்கும் திமுகவை பாருங்கள் என மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் பாரதமாதா குறித்து ராகுல் காந்தி பேச்சுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். காஷ்மீர் இந்தியாவில் இருக்க வேண்டுமா? வேண்டாமா? காங்கிரஸ் பதில் சொல்ல வேண்டும்
பாரத் என்றால் வட இந்தியா என தமிழ்நாடு தலைவர் ஒருவர் கூறுகிறார். பாரத் என்றால் வட இந்தியா மட்டும் தானா என காங்கிரஸ் விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி காலத்தில் நடந்த பெண்கள் மீதான படுகொலைக்கு பதில் அளிப்பீர்களா என ஆவேசமாகவே பேசினார்.