Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி சென்ற விமானம் திடீரென திருப்பிவிடப்பட்டதால் பரபரப்பு.. என்ன காரணம்?

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:16 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாக்பூரில் இருந்து டெல்லிக்கு விமான மூலம் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த விமானம் ஜெய்ப்பூருக்கு திருப்பி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி நேற்று நாக்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு அதன் பின்னர் டெல்லி செல்ல விமானத்தில் ஏறினார். இந்த நிலையில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த அந்த விமானம் பனி காரணமாகவும் வெளிச்சமின்மை காரணமாகவும் டெல்லி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து டெல்லி செல்ல வேண்டிய அந்த விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு பதிவாகி வருவதை அடுத்து மூன்றாவது நாளாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 நேற்று ஒரே நாளில் 60க்கும் மேற்பட்ட டெல்லி செல்லும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் ஜெய்ப்பூரில் இருந்து இன்று ராகுல் காந்தி டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments