Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்காந்தி : கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரித்தார்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்காந்தி : கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரித்தார்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல்காந்தி : கருணாநிதியின் உடல் நிலை பற்றி விசாரித்தார்
, சனி, 5 நவம்பர் 2016 (14:53 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி கேட்டறிந்தார்.


 

 
கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் ஆகியவைகளில், திமுகவுடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிக்க, சென்னைக்கு வந்த ராகுல், நேராக அப்பல்லோ மருத்துவமனை சென்றார். அங்கு சுமார் 45 நிமிடம் இருந்தார். அதன்பின் டெல்லிக்கு கிளம்பி சென்று விட்டார்.
 
கூட்டணி தலைவர் என்ற முறையில் திமுக தலைவர் கருணாநிதியை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதை செய்யவில்லை. இது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.
 
தற்போது கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நலம் குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் விசாரித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், ராகுல்காந்தி, எம்.பி. கனிமொழியிடம் தொலைபேசி வழியாக கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காற்று வாங்கிய திமுக பிரச்சாரக் கூட்டம் : கரூரில் பரபரப்பு